'மான்ட்டி பைதான்' நடிகர் டெர்ரி ஜோன்ஸ் மரணம்

By செய்திப்பிரிவு

'மோன்ட்டி பைதான்' நகைச்சுவைக் குழுமத்தின் நிறுவனரும் நடிகருமான டெர்ரி ஜோன்ஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 77.

1960களின் இறுதியில் பிபிசியில் ஒளிபரபரப்பான ‘மோன்ட்டி பைதான்’ என்ற நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர் உலகமெங்கும் பிரபலம். இது தவிர பல்வேறு மேடை நாடகங்கள், திரைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள், ஆல்பங்கள் உள்ளிட்டவற்றிலும் ‘மோன்ட்டி பைதான்’ குழுவினரின் ஆதிக்கம் இருந்து வந்தது.

‘மோன்ட்டி பைதான்’ குழுமத்தின் நிறுவனர் டெர்ரி ஜோன்ஸ் நடித்து இயக்கிய ‘மோன்ட்டி பைதான் அன்ட் தி ஹோலி க்ரெய்ல்’, ‘லைஃப் ஆஃப் பிரையன்’ ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மூளையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த டெர்ரி ஜோன்ஸ் நேற்று முன் தினம் லண்டனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 77. ’

ஜோன்ஸின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, “கனிவான, வேடிக்கையான, அன்பான ஆக்கபூர்வமான ஒரு மனிதரை நாங்கள் இழந்துவிட்டோம். தனது அற்புதமான நகைச்சுவை, சமரசமற்ற தனித்துவம் ஆகியவற்றின் மூலம் 60 ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்களை மகிழ்வித்தார்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்