வெளியானது ’தி எடர்னல்ஸ்’ படத்தின் கதை!

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு வெளியாகவுள்ள ’தி எடர்னல்ஸ்' படத்தின் கதையை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 22-வது படமாக உலகமெங்கும் வெளியாகி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’. அதற்குப் பிறகு வெளியான ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ படத்தோடு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 3 ஆம் பாகம் முடிவுக்கு வந்தது.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் நான்காம் பாகத்துக்கான படங்களின் பட்டியலை சில மாதங்களுக்கு முன்பு மார்வெல் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் 'பிளாக் விடோ’, 'தி எடர்னல்ஸ்’, 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2’, 'தோர்: லவ் அன்ட் தண்டர்’ ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் 'தி எடர்னல்ஸ்’ படத்தின் கதைச் சுருக்கத்தை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பழங்கால வேற்றுகிரகவாசிகள் ஆயிரம் ஆண்டுகளாக பூமியில் ரகசியமாக வாழ்ந்து வருகின்றனர். ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தைத் தொடர்ந்து நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவத்துக்குப் பிறகு மனிதகுலத்தின் எதிரியான ‘தி டீவியன்ட்ஸ்’ எனப்படும் சக்திகளுக்கு எதிராக அவர்கள் ஒன்றிணைவதே ‘தி எடர்னல்ஸ்’ படத்தின் கதை.

ச்லோ ஸாவ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஏஞ்சலினா ஜூலி, சல்மா ஹயக், கெம்மா சான், கிட் ஹாரிங்டன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

‘தி எடர்னல்ஸ்’ படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்