2019ஆம் ஆண்டு வெளியான படங்களில் டிஸ்னி நிறுவனத்தின் 7 படங்கள் உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளன.
’ஸ்டார் வார்ஸ்: ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர்’ படம் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. ஸ்டார் வார்ஸ் படவரிசையில் ஒன்பதாவது படமான அது கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரத்தின்படி உலகம் முழுவதும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளது.
கடந்த 2019 ஆண்டில் மட்டுமே டிஸ்னியின் ’கேப்டன் மார்வெல்’, ’அவெஞ்சர்ஸ்: என்ட்கேம்’, ’அலாவுதீன்’, ’தி லயன் கிங்’, ’டாய் ஸ்டோரி 4’, ’ஃப்ரோஸன் 2’ ஆகிய 7 படங்கள் 1 பில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ளன. தற்போது அந்த வரிசையில் ’ஸ்டார் வார்ஸ்: ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர்’ படமும் இணைந்துள்ளது.
டிசம்பர் 20ஆம் தேதி வெளியான ’ஸ்டார் வார்ஸ்: ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர்’ படம் வெளியான முதல் வாரத்தில் வட அமெரிக்காவில் 177 மில்லியன் டாலர்கள் வசூலித்திருந்தது. தற்போது அது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு டிஸ்னி நிறுவனத்தின் 4 படங்கள் 1 பில்லியன் டாலர்களை கடந்து வசூல் சாதனை செய்திருந்தது. தற்போது அந்த சாதனை டிஸ்னி நிறுவனத்தாலேயே முறியடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago