ஹாலிவுட் ரசிகர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பானதாக அமைந்திருந்தது. அவர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த ’அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’, ’டாய் ஸ்டோரி 4’, ’ஃப்ரோஸன் 2’, ’ஜோக்கர்’ உள்ளிட்ட படங்கள் வெளியாயின. அதேபோல இந்த ஆண்டும் ஹாலிவுட் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படங்கள்
1) No Time to Die
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 1962 ஆம் ஆண்டு வெளியான ’டாக்டர் நோ’ முதல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பெக்ட்ரே’ வரை ஒவ்வொரு படமும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்த ஆண்டு 25-வது பாண்ட் படமாக ‘நோ டைம் டூ டை’ வெளியாக உள்ளது. டேனியல் க்ரெய்க் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமும் இதுதான் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
No Time to Die படத்தின் ட்ரெய்லர்:
2) Wonder Woman: 1984
டிசி நிறுவனத்தின் ’பேட்மேன் Vs சூப்பர்மேன்’, ’ஜஸ்டிஸ் லீக்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’வொண்டர் வுமன்’. புகழ்பெற்ற காமிக்ஸ் கதாபாத்திரமான வொண்டர் வுமன் கதாபாத்திரத்தில் கேல் கடோட் நடிக்கும் இப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகிறது.
Wonder Woman: 1984 படத்தின் ட்ரெய்லர்
3) Black Widow
மார்வெல் காமிஸின் பிரபலமான கதாபாத்திரம். ‘அயர்ன் மேன் 2’ படம் தொடங்கி பெரும்பாலான மார்வெல் படங்களில் ஒரு அங்கமாக இடம்பெற்றாலும் பிளாக் விடோவுக்கென தனிப் படம் இதுவரை வரவில்லை. சமூக வலைதளங்களில் இது ஒரு விமர்சனமாகவே எழுந்த நிலையில் ப்ளாக் விடோவுக்கென தனியாக ஒரு படத்தை உருவாக்க மார்வெல் நிறுவனம் முடிவு செய்தது. ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் நடித்துள்ள இப்படம் இந்த மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Black Widow படத்தின் ட்ரெய்லர்
4) Birds of Prey
டிசி நிறுவனத்தின் மற்றொரு படம். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ’சூசைட் ஸ்குவாட்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், அதில் இடம்பெற்றிருந்த ’ஹார்லி குயின்’ கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதனால் அந்தக் கதாபாத்திரத்துக்கு தனியாக ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்து எடுக்கப்பட்ட படமே ’பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’. முந்தைய படத்தில் ஹார்லி குயினாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மார்காட் ராபீயே இப்படத்திலும் நடிக்கிறார். இப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Birds of Prey படத்தின் ட்ரெய்லர்
5) Top Gun: Maverick
1986 ஆம் ஆண்டு டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ’டாப் கன்’. 34 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமா ’டாப் கன்: மாவெரிக்’ வெளியாக இருக்கிறது. ஸ்கைடான்ஸ் நிறுவனத்துடன் டாம் க்ரூஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Top Gun: Maverick படத்தின் ட்ரெய்லர்
6) TENET
பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 11-வது படம். வித்தியாசமான கதைகளாலும், வியக்கவைக்கும் திரைக்கதையாலும் உலகமெங்கும் பல ரசிகர்களைக் கொண்டவர் கிறிஸ்டோபர் நோலன். அவரது அடுத்த படமான ’டெனெட்’ படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் ஜூன் மாதம் 17 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
TENET படத்தின் ட்ரெய்லர்
7) Dolittle
’எண்ட்கேம்’ படத்துக்குப் பிறகு ’அயர்ன் மேன்’ கதாபாத்திரத்திலிருந்து வெளியேறி ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் முதல் படம். அமெரிக்காவில் புகழ்பெற்ற ’டாக்டர் டூலிட்டில்’ என்ற சிறுவர் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Dolittle படத்தின் ட்ரெய்லர்
8) Mulan
’ஜங்கிள் புக்’, ’அலாவுதீன்’, ’தி லயன் கிங்’ கார்ட்டூன் படங்களை திரைப்படமாக்கி வெற்றி கண்ட டிஸ்னியின் அடுத்த முயற்சி இது. 1998 ஆம் ஆண்டு டிஸ்னி தயாரிப்பில் வெளியான 'Mulan’ கார்ட்டூன் படத்தின் மறுபதிப்பான இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகிறது.
Mulan படத்தின் ட்ரெய்லர்
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago