தாயைக் கொலை செய்ததாக ‘கேப்டன் அமெரிக்கா- தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு என்ற நடிகையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் கன்ஸாஸ் நகரத்தைச் சேர்ந்தவர் மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு (38). நடிகையும், தயாரிப்பாளருமான இவர் சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரித்தும் அவற்றில் நடித்தும் வந்தார். 2011 ஆம் ஆண்டு வெளியான மார்வெல் நிறுவனம் தயாரித்த ‘கேப்டன் அமெரிக்கா- தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மோலி நடித்தார். அந்தப் படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.
இந்நிலையில் 68 வயதான தனது தாயைக் கொலை செய்ததாக மோலி ஃபிட்ஸ்ஜெரால்டை கன்சாஸ் நகர போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
மோலியின் தாய் பேட்ரீஸியா ஃபிட்ஸ்ஜெரால்ட் தனது சகோதரர் கேரியுடன் பல ஆண்டுகளாக ஹூஸ்டனில் வசித்து வந்தார். அவர் கன்ஸாஸ் நகரில் குடியேற முடிவு செய்திருந்த நிலையில், சொந்த மகளாலேயே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் மோலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago