2019 ஆம் ஆண்டில் ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ மற்றும் ’தி லயன் கிங்’ ஆகிய இரு படங்களும் பாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு இந்தியாவில் வசூலை வாரிக் குவித்தன.
ஹாலிவுட் ரசிகர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சிறப்பானதாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். நீண்ட நாட்கள் காத்திருந்த ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’, ’டாய் ஸ்டோரி 4’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாயின.
பொதுவாக ஹாலிவுட் டப்பிங் படங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகம்தான் என்றாலும் இந்தியப் படங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு அவை வசூலிப்பதில்லை. ஆனால் அந்த மாயை இந்த ஆண்டு வெளியான இரண்டு ஹாலிவுட் படங்களின் மூலம் உடைக்கப்பட்டது.
அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் வெளியானதிலிருந்தே அடுத்த பாகத்துக்கு காத்துக் கொண்டிருந்த ரசிகர்களக் கூட்டம் கூட்டமாய் திரையரங்கங்களுக்கு இழுத்து வந்தது கடந்த மே மாதம் வெளியான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம்.
பெரிய நடிகர்களின் படங்களுக்குச் சற்றும் குறைவில்லாத மிகப்பெரிய ஓப்பனிங்குடன் வெளியான இப்படத்துக்கு சில அரங்குகளில் அதிகாலை 4 மணி காட்சி கூட திரையிடப்பட்டது. இந்தியா முழுவதுமுள்ள பெரிய திரையரங்கங்களின் நிர்வாகிகள் தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஹாலிவுட் படம் இந்தியப் படங்களைப் பின்னுக்குத் தள்ளியது' என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த ஆண்டு இந்தியாவில் வெளியான படங்களில் அதிக டிக்கெட்டுகள் விற்ற படம் ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ தான் என ஆன்லைன் டிக்கெட் விற்பனைத் தளமான புக் மை ஷோ தெரிவித்துள்ளது. படம் இந்தியாவில் மட்டும் வசூலித்த தொகை ரூ.370 கோடி.
அடுத்ததாக ’தி லயன் கிங்’. 1994 ஆம் ஆண்டு டிஸ்னி தயாரிப்பில் உருவான கார்ட்டூன் படத்தின் ரீமேக். இன்றைய தலைமுறை சிறுவர்களைக் கவர ஜங்கிள் புக், அலாவுதீன் வரிசையில் முழுப் படமாக வெளியானது ’தி லயன் கிங்’. ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இந்தியாவில் வசூலித்த தொகை ரூ.150 கோடி. ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்துக்கு அடுத்தபடியாக இந்தியப் படங்களுக்கு நிகராக வசூல் செய்தது இப்படம். புக் மை ஷோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தப் படம் அதிக டிக்கெட்டுகள் விற்று ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
திரைப்படங்களின் வசூல் குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கவுதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு வெற்றி தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய, அதிகம் பேர் பார்த்த, அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்துப் பட்டியலிலும் தவறாமல் ’தி லயன் கிங்’ மற்றும் ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ஆகிய இரு படங்களும் இடம் பெற்றுள்ளன.
மல்டிப்ளக்ஸ் கலாச்சாரம் வேகமாகப் பரவி வரும் இந்த சூழலில் மேற்குறிப்பிட்ட இரண்டு படங்கள் தவிர்த்து ஜோக்கர், ஜுமாஞ்சி, ஜுராசிக் வேர்ல்ட், ஸ்பைடர்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வசூலை ஈட்டின.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago