மீண்டும் உருவாகிறது ’ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ திரைப்படம்

By செய்திப்பிரிவு

'ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்' படத்தின் புதிய பதிப்பை 'மேஸ் ரன்னர்' படத்தின் இயக்குநர் வெஸ் பால் இயக்கவுள்ளார்.

1963-ஆம் ஆண்டு பியல் போல் என்பவரால் எழுதப்பட்ட நாவலே 'ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்'. 1968-ஆம் ஆண்டு முதல்முறையாக திரைப்படமாக உருவானது. 1973-ஆம் ஆண்டு வரை ஐந்து பாகங்கள் தொடர்ந்து வெளியானது. இதன் பிறகு 70-களில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பானது.

இதன் பின் டிம் பர்டன் இயக்கத்தில் 2001-ஆம் ஆண்டு ரீபூட் செய்யப்பட்டு மீண்டும் திரைப்படமாக உருவானது. வசூல் ரீதியாக வெற்றிப்படமாக ஆன போதிலும் இந்தப் படத்தின் அடுத்த பாகங்கள் எடுக்கப்படவில்லை. 2011-ஆம் ஆண்டு 'ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்' மீண்டும் ரீபூட் செய்யப்பட்டது. தொடர்ந்து 2017 வரை இன்னும் இரண்டு பாகங்கள் வெளியானது. இந்த மூன்று பாகங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்த மூன்று படங்களோடு இந்த பட வரிசையின் கதை முடிந்தது.

தற்போது மீண்டும் 'ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்' திரைப்படமாக உருவாகவுள்ளது என்றும், இதை 'மேஸ் ரன்னர்' திரைப்படத்தின் இயக்குநர் வெஸ் பால் இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முந்தைய படங்களின் தொடர்ச்சியா அல்லது ரீபூட்டா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.

20த் சென்ச்சுர் ஃபாக்ஸ் நிறுவனத்தை டிஸ்னி வாங்கிய பிறகு உருவாகவுள்ள முதல் பிரம்மாண்டத் திரைப்பட வரிசையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்