ஸ்டார் டிரெக் அறிவியல் புனை கதையில் வரும் கதாபாத்திரமான மிஸ்டர் ஸ்போக்கின் உடைகள் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட உள்ளன.
அமெரிக்க அறிவியல் புதின மான ‘ஸ்டார் டிரெக்’, திரைப்படமா கவும், டிவி தொடர்களாகவும், காமிக் புத்தகங்களாகவும் வந்து மிகவும் புகழ்பெற்றது. 1967-68-ம் ஆண்டுகளில் வெளிவந்த இத்தொடரில் லியானர்டு நிமோய் என்பவர் ஸ்போக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் அக்கதாபாத்திரத்துக்காக அணிந்திருந்த உடைகள் தற்போது ஏலத்துக்கு விடப்பட உள்ளன.
கடந்த மாதம்தான் நிமோய் தனது 83-வது வயதில் உயிரிழந்தார். இந்த உடைகளை பிரிட்டனைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் ஏலத்தில் விடுகிறார். இந்த உடைகள் 70 ஆயிரம் பவுண்டுகளுக்கு ( சுமார் ரூ.70 லட்சம்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, ஸ்டார் டிரெக் தொடரில் பயன்படுத்தப்பட்ட விண்கல மாதிரி, ஸ்டோர்ம்ட்ரூப்பர் ஹெல்மெட், டெர்மினேட்டர் 3 படத்தில் அர்னால்டு அணிந்திருந்த மேலங்கி, வோல்வோரின் (எக்ஸ்மேன்) படத்தில் ஹக் ஜேக்மேன் பயன்படுத்திய கையுறைகள் ஆகியவையும் ஏலத்தில் விடப்பட உள்ளன.
வரும் 23-ம் தேதி லண்டனில் இவை ஏலத்துக்கு வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago