'ஸ்லம்டாக் மில்லியனர்' நாயகி ஃப்ரீடா பின்ட்டோ தனது வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த திரைப்படம் 'ஸ்லம்டாக் மில்லியனர்'. இதில் கதாநாயகியாக நடித்து புகழின் உச்சிக்குச் சென்றவர் ஃப்ரீடா பின்ட்டோ. இவர் இம்மார்டல்ஸ், ரைஸ் ஆஃப் தி ப்ளானர் ஆஃப் தி ஆப்ஸ், ட்ரிஷ்னா, மோக்லி, ப்ளாக் கோல்ட் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (22.11.19) இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றியுள்ளார்.
அந்தப் புகைப்படத்தின் கீழே, “இப்போது அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. உலகம் அர்த்தமுள்ளதாகிறது. கடந்தகாலக் கண்ணீர் அர்த்தமுள்ளதாகிறது. காதல் அர்த்தமுள்ளதாகிறது. நான் இருக்கும் இடம் அர்த்தமுள்ளதாகிறது. நான் செல்ல விரும்பும் இடமும் அர்த்தமுள்ளதாகிறது. நீங்கள்தான் என் வாழ்க்கைக்குள் நுழைந்தவற்றில் மிக அழகான படைப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஃப்ரீடா பின்ட்டோ தனது வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago