மார்வலின் சூப்பர் ஹீரோ படங்கள் குறித்து ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றமும் வருத்தமும் தருகிறது என நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் கூறியுள்ளார். நடிகர் க்றிஸ் ஈவன்ஸும் ஸ்கோர்செஸியின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''மார்வல் திரைப்படங்கள் சினிமாவே அல்ல. அவை தீம் பார்க்கைப் போல'' என்று ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் மார்ட்டின் ஸ்கோர்செஸி கருத்துத் தெரிவித்தார்.
மேலும், நியூயார்க் டைம்ஸ் நாளிதழிலும், அந்தப் படங்கள் ஒரு குறிப்பிட்ட விருப்பங்களைப் பூர்த்தி செய்ய எடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு ஆச்சரியம், மர்மம், ஒழுங்கான உணர்ச்சிரீதியான ஆபத்து என எவையும் இல்லை என்று மீண்டும் தனது கருத்துகளை நியாயப்படுத்திக் கட்டுரை எழுதியிருந்தார்.
இதுகுறித்து 'அவெஞ்சர்ஸ்' படங்களில் ப்ளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், "முதலில் இந்தக் கருத்துகள் பழமைவாதமாகத் தெரிந்தது. வேறொருவர் எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. ஏனென்றால் அந்தக் கருத்து (அவரிடமிருந்து வருவது) ஒரு வகையில் ஏமாற்றமாக, வருத்தம் தரும்படி இருந்தது.
திரையரங்குகளில் சிறிய படங்களுக்கு இடம் இல்லை. பிரம்மாண்ட படங்களே பிரதானமாக இருக்கின்றன என்று அவர்கள் சொல்வது மக்கள் சினிமாவை எப்படிப் பார்க்கிறார்கள் என்று என்னை யோசிக்க வைத்தது. இன்று அவர்கள் பார்க்கும் விதத்தில் கடலளவு மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன" என்று கூறியுள்ளார்.
கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ள க்றிஸ் ஈவன்ஸ் பேசுகையில், "எல்லாவற்றுக்கும் இங்கு இடம் இருக்கிறது என நான் நம்புகிறேன். ஒரு குறிப்பிட்ட வகையான இசை இசையே அல்ல என்று கூறுவது போல இருக்கிறது. நீங்கள் யார் அதைச் சொல்ல?" என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நடிகர்களுமே மரியாதை கருதி ஸ்கோர்செஸியின் பெயரை நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago