'ஜோக்கர்' படத்தை இயக்க நேரமும் விருப்பமும் இல்லை - மார்ட்டின் ஸ்கோர்செஸி

By செய்திப்பிரிவு

சில நாட்களுக்கு முன்பு பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி, மார்வெல் படங்கள் சினிமா அல்ல; அவை சாகசங்கள் நிறைந்த ஒரு தீம் பார்க் அனுபவத்தையே தருகின்றன என்று கூறியதற்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு உருவானது.

பிரபல மார்வெல் பட இயக்குநர்கள் ஜாஸ் வெட்டோன், ஜேம்ஸ் கன், பீட்டர் ராம்சே மற்றும் நடிகர் சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோரும் ஸ்கோர்செஸியின் கருத்துகளுக்குப் பதிலளித்திருந்தனர்.

இந்நிலையில் தனது இயக்கத்தில் வெளியாகவுள்ள ’தி ஐரிஷ்மேன்’ திரைப்படத்துக்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மார்ட்டின் ஸ்கோர்செஸி பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

'' 'ஜோக்கர்' திரைப்படத்தை இயக்குவது பற்றி சில ஆண்டுகளாக யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான நேரமோ அல்லது படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஒரு காமிக் புத்தகக் கதாபாத்திரமாக மாறக்கூடிய ஒரு படத்தை இயக்க விருப்பமோ இல்லை.

‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் டாட் பிலிப்ஸ் “இது உங்களுக்கான படம்” என்று என்னிடம் கூறினார். நான் “எனக்கு விருப்பமிருப்பதாகத் தெரியவில்லை” என்று கூறிவிட்டேன். சில தனிப்பட்ட காரணங்களால், இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரிந்தாலும், இதை நான் எடுக்க நான் விரும்பவில்லை.

'ஜோக்கர்' படத்தை ஒரு சராசரி சூப்பர் ஹீரோ படமாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதை நான் எடுக்க விரும்பவில்லை என்பதற்காக இது நல்ல படைப்பு இல்லை என்று ஆகிவிடாது. இது எனக்கானது இல்லை. அவ்வளவுதான்.

சூப்பர் ஹீரோ படங்கள் கலையின் வேறு வடிவங்கள். என்னுடைய படைப்புகளிலிருந்து வேறுபட்டவை. அவற்றை உருவாக்குவது எளிதல்ல. இந்தப் படங்களில் திறமையான பலர் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர். இளைஞர்கள் அவற்றை ரசிக்கிறார்கள்.”

இவ்வாறு மார்ட்டின் ஸ்கோர்செஸி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

மேலும்