'புரூஸ் லீக்காக வலிப்பது போல நடித்தேன்' - மனம் திறந்த ஜாக்கி சான்

By செய்திப்பிரிவு

‘என்டர் தி ட்ராகன்’ படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் புரூஸ் லீக்காக வலிப்பது போல நடித்தேன் என்று நடிகர் ஜாக்கி சான் கூறியுள்ளார்.

புரூஸ் லீ நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான படம் ‘என்டர் தி ட்ராகன்’. உலகமெங்கும் பெரும் வெற்றியைக் குவித்த இந்தப் படத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். படத்தில் புரூஸ் லீ ஒரு அடியாள் கும்பலைத் தாக்குவது போன்ற ஒரு காட்சியில் புரூஸ் லீயிடம் அடிவாங்கும் அடியாட்களில் ஒருவராக ஜாக்கிசான் நடித்திருப்பார்.

அந்தக் காட்சியில் நடித்த அனுபவத்தைப் பற்றி ஜாக்கி சான் மனம் திறக்கும் வீடியோ ஒன்றை புரூஸ் லீயின் மகள் ஷனோன் லீ தனது தந்தையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில் ஜாக்கிசான் கூறியிருப்பதாவது:

'' 'என்டர் த ட்ராகன்' படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் அடிவாங்க வேண்டும். எனக்குப் பின்னால் கேமரா இருந்தது. எனக்கு முன்னால் புரூஸ் லீ இருந்தார். நான் அவரை நோக்கி ஓடிச் சென்றேன். திடீரென எனது கண்கள் இருட்டிவிட்டன. அப்போது தான் அவர் ஒரு குச்சியை வைத்து என்னை அடித்ததை உணர்ந்தேன். எனக்கு மயக்கம் வந்துவிட்டது. நான் புரூஸ் லீயைப் பார்த்தேன். அவரோ இயக்குநர் கட் சொல்லும்வரை நடித்துக் கொண்டே இருந்தார்.

பின்னர் குச்சியைத் தூக்கி எறிந்து விட்டு என்னை நோக்கி ஓடி வந்து, என் தலையை தூக்கி ‘மன்னித்து விடு’ என்று கூறினார். எனக்கு வலி போய்விட்டது. நான் அப்போது இளைஞனாகவும் வலிமையாகவும் இருப்பேன். ஆனால் புரூஸ் லீ என்னைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வலிப்பது போல நடித்தேன். அன்று முழுவதும் அப்படியே செய்து கொண்டிருந்தேன்''.

இவ்வாறு ஜாக்கி சான் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே புரூஸ் லீ இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்