மும்பை,
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் டன்கிரிக் படத்திற்குப் பிறகு அடுத்ததாக இயக்கிவரும் 'டெனட்' படப்பிடிப்பு வேலைகளுக்காக இந்தியா வந்துள்ளார்.
கிறிஸ்டோபர் நோலன், அவரது முதல் படமான 'ஃபாலோயிங்' 1998 மூலம் இயக்குநராக அடியெடுத்துவைத்தார். அதன்பிறகு 10 படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் முக்கியமானவை எனினும் 'மெமண்டோ' (2000), 'டார்க்நைட்' (2008), 'இன்செப்ஷன்' (2010), 'டன்கிரீக்' (2017) போன்ற படங்கள் அவரது பேர்சொல்லும் படங்களாக அமைந்துவிட்டன.
'டன்கிரீக்' படத்தைத் தொடர்ந்து அவரது அடுத்த படமான 'டெனெட்' படத்திற்கான படப்பிடிப்பு பணிகளுக்காக நோலன் இந்தியா வந்துள்ளார்.
அவருடன் 'டிவைலைட்' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் ராபர்ட் பாட்டின்சனும் உடன் வந்திருந்தார். பாட்டின்சனை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டனர். அந்த செல்ஃபி படமும் நோலன் விமான நிலையத்தில் நடந்து வரும் புகைப்படம் ஒன்றும் ரசிகர்கள் படம்பிடித்து இணைய தளங்களில் வெளியிட்டனர். தற்போது அப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற உள்ள 'டெனெட்' திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் அட்டவணை திட்டம் பெரும்பாலும் இதுவரை எங்கும் வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
'டெனெட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 10 நாட்கள் மும்பையில் நடக்கும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. ஓர் ஆக்ஷன் படமாகத் தயாராகிவரும் 'டெனெட்' படத்தில் பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் படம் ஏழு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் 2020 ஜூலை 17 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதுதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago