அடுத்த அவெஞ்சர்ஸ் படங்கள் என்னென்ன? - மார்வெல் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் நான்காம் பகுதிக்கான படங்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காமிக்ஸ் உலகின் புகழ்பெற்ற அயர்ன்மேன், ஹல்க், தோர், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாக கடந்த 2008 முதல் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற பெயரில் மார்வெல் நிறுவனம் திரைப்படங்களாக வெளியிட்டு வருகிறது. 

மொத்தம் 3 பகுதிகளை கொண்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இதுவரை 23 படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் வெளியான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்தில் முக்கிய அவெஞ்சர்களான அயர்ன்மேன் மற்றும் ப்ளாக் விடோ இறந்து விடுகிறார்கள், கேப்டன் அமெரிக்காவுக்கும் வயதாகி விடுவதோடு படம் முடிகிறது. 

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மூன்றாவது பகுதியின் கடைசி படமாக சமீபத்தில் வெளியான ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ படத்தில் அடுத்த அவெஞ்சர்கள் குறித்த கேளிவிகளுக்கு சரியான விடை இல்லை.

இதன்பிறகு அவெஞ்சர்ஸ் படங்கள் வெளியாகுமா? அப்படி வெளியானால் அதில் முக்கிய சூப்பர்ஹீரோக்கள் யார்? என்ற கேள்வி மார்வெல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

இந்நிலையில் நேற்று (ஜூலை 20) மார்வெல் நிறுவனம் அவெஞ்சர்ஸ் அடுத்த பகுதிக்கான படங்களின் பட்டியலையும் அவை வெளியாகும் தேதியையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது,

அவை: 

Black Widow - May 1, 2020

Eternals - November 6, 2020

Shang-Chi and the Legend of the 10 Rings - February 21, 2021

Doctor Strange in the Multiverse of Madness - May 7, 2021

Thor: Love and Thunder - November 5, 2021

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்