தி லயன் கிங் - திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

காட்டின் அரசனான முஃபாஸாவுக்கு ஆண் சிங்கக் குட்டி ஒன்று பிறக்கிறது. அதன் பிறப்பை காட்டு விலங்குகள் கொண்டாடி வரவேற்கின்றன. இங்கிருந்து படம் தொடங்குகிறது. 

அரசர் முஃபாஸாவின் சகோதரன் 'ஸ்கார்'. ராஜ்ஜியம் தனக்கு கிடைக்கவில்லையே என்ற கோபத்தில் முஃபாஸாவை வீழ்த்த தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இதற்காக காட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறது. இதற்காக முஃபாஸாவின் மகனும் வருங்கால அரசனுமான சிம்பாவை ஏமாற்றி அதற்குத் தெரியாமல் முஃபாஸாவைக் கொல்கிறது. தனித்து விடப்படும் சிம்பாவிடம் இங்கிருந்து ஓடிவிடு என்று கூறி காட்டை விட்டே விரட்டுகிறது. 

பின்னர் முஃபாஸாவும் சிம்பாவும் இறந்துவிட்டதால் இனி நானே இக்காட்டின் அரசன் என்று அறிவிக்கிறது. முஃபாஸாவால் விரட்டப்பட்ட கழுதைப் புலிகளை மீண்டும் காட்டுக்குள் வரவழைத்து அட்டூழியங்களைச் செய்கிறது. தப்பிச் சென்ற சிம்பா என்னவானது? ஸ்காரிடமிருந்து காடு மீட்கப்பட்டதா என்பதே 'தி லயன் கிங்' படத்தின் கதை.

1994 ஆம் ஆண்டு வெளியான 'தி லயன் கிங்' கார்ட்டூன் படத்தின் மீளுருவாக்கமே இந்தப் படம். 2016 ஆம் ஆண்டு வெளியான 'தி ஜங்கிள் புக்' படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியால் இயக்குநர் Jon Favreauக்கு 'லயன் கிங்'கை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது டிஸ்னி. 

பழைய 'லயன் கிங்'கின் வெற்றியே அதன் சென்டிமென்ட் காட்சிகளும், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்ட விதமும்தான். அதை மீண்டும் சரியாய் செய்கிறது புதிய 'லயன் கிங்'.

இந்தத் தலைமுறைக்கு ஏற்றபடி மாற்றுகிறேன் பேர்வழி என்று எதையும் மாற்றாமல் அப்படியே எடுத்திருப்பதால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. ‘Circle of life' என்ற பாடல் தொடங்கும்போது திரையரங்கில் எழும் ஆரவாரம்  மீண்டும் அதே பாடலுடன் படம் முடியும் வரை தொடர்கிறது. குறிப்பாக டிமோன், பும்பா கதாபாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வசனமும் ரகளை. 

பழைய 'லயன் கிங்' படத்திற்குப் பிறகு 'பாகுபலி', 'ப்ளாக் பேந்தர்' உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் இதே கதைகள் வந்துவிட்டாலும் அலுப்பு தட்டாமல் மீண்டும் பார்க்க முடிகிறது.

80s மற்றும் 90s கிட்ஸ்களுக்கு தாங்கள் சிறுவயதில் கொண்டாடிய ஒரு படத்தையும் அதன் கதாபாத்திரங்களையும் மீண்டும் திரையில் புதிய வடிவில் காண்பது அலாதி அனுபவமாக இருக்கும். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்