பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கும் அமெரிக்க டிவி தொடர்

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் 'குவாண்டிகோ' என்ற தொலைக்காட்சித் தொடரின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சியில் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரியங்கா, "ட்ரெய்லர் வந்துவிட்டது. எப்படி இருக்கிறது? நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

எஃப்.பி.ஐ பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுபவராக இருக்கும் பிரியங்கா, ஒரு சதியில் மாட்டி தீவிரவாதி என்று குற்றம் சுமத்தப்படுகிறார். இதிலிருந்து அவர் எப்படி தன்னைக் காத்துக் கொள்கிறார் என்பதே 'குவாண்டிகோ' தொடரின் கதை. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தொடரில் அலெக்ஸ் பேரிஷ் என்ற பாத்திரத்தில் பிரியங்கா தோன்றுகிறார்.

ஹாலிவுட்டுக்கே உரிய சண்டை காட்சிகள், சேஸிங், கவர்ச்சி என அத்தனையும் குவாண்டிகோவில் உள்ளது. இந்தியக் கலைஞர் ஒருவர் ஹாலிவுட் டிவி தொடரில் முதன்மை பாத்திரத்தில் தோன்றுவது இதுவே முதல் முறை என்பதால், பலரது கவனம் குவாண்டிகோவின் பக்கம் திரும்பியுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

மேலும்