ஹாலிவுட் திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் ‘பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' எனும் படத்தைத் தயாரித்து வருகிறது. அதன் டிரெய்லரை மே 15ம் தேதி வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் ‘பேட்மேன்' மற்றும் ‘சூப்பர்மேன்' ஆகிய காமிக்ஸ் கதாபாத்திரங்கள் குழந்தைகளிடம் மட்டுமின்றி பெரியவர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றவை ஆகும்.
அந்த இரண்டு கதாபாத் திரங்களையும் ஒன்றாக திரையில் காட்டுவதற்கு வார்னர் பிரதர்ஸ் முயன்று வருகிறது. ‘பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்' என்று பெயரிடப் பட்டுள்ள அந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை மே 15ம் தேதி வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். ‘மேன் ஆஃப் ஸ்டீல்' படத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட காட்சிகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டன. ‘மேன் ஆஃப் ஸ்டீல்' படத்தில் சூப்பர் மேனாக நடித்த ஹென்றி கவில் இந்தப் படத்திலும் அதே கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். பேட்மேனாக பென் அஃப்லெக் நடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு மார்ச் 25ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago