விமானத்திலிருந்து தாவும் கார்கள்: ஃபியூரியஸ் 7 படத்தின் அட்டகாச ஆக்‌ஷன்

By செய்திப்பிரிவு

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் 7-வது பாகமான பியூரியஸ் 7, ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் புதிய ஆக்‌ஷன் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பறந்து கொண்டிருக்கும் பெரிய விமானத்திலிருந்து, படத்தின் முக்கியப் பாத்திரங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காரில் உட்கார்ந்து கொண்டிருக்க, விமானத்தின் கதவு திறக்கிறது. கார்கள் அடுத்தடுத்து கீழே விழுகின்றன.

கிராபிக்ஸ் காட்சியாக இருந்தாலும், தத்ரூபமாக கார்கள் விழுவதையும், உள்ளே இருக்கும் நடிகர்கள் அந்தரத்தில் உணரும் அழுத்தத்தையும், பாராசூட் விரிவதையும் பார்க்கையில் ரசிகர்களுக்கு அட்டகாசமான இன்னொரு ஆக்‌ஷன் படம் காத்திருக்கிறது என்பது தெரிகிறது.

படம், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் இந்தப் படம் இந்தியாவில் வெளியாகிறது. வின் டீசல், மறைந்த பால் வாக்கர், 'ராக்' ஜான்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில், 7-ஆம் பாகத்தில், 'டிரான்ஸ்போர்டர்' நாயகன் ஜேஸன் ஸ்டாதம் இணைந்துள்ளார்.

புதிய காட்சி:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

மேலும்