திரைப்படமாகிறது ஒபாமாவின் காதல் கதை

By பிடிஐ

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் காதல் கதை திரைப்படமாக உருவாகவுள்ளது. ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலும் காதலித்த கதை 'சவுத் சைட் வித் யூ'(southside with you) என்ற பெயரில் தயாராகிறது.

1989-ஆம் ஆண்டு, முதன்முதலில் ஒபாமாவும், மிச்செலும் சந்தித்த தருணங்களை இத்திரைப்படம் விவரிக்கவுள்ளது. நடிகை டீகா சம்ப்டர், மிச்செல்லாக நடிக்கவுள்ளார். ஒபாமா பாத்திரத்தில் நடிப்பதற்கான நடிகர் தேர்வு நடைபெற்றுவருகிறது.

1989-ல் ஒரு சட்ட நிறுவனத்தில், மிச்செல்லும், ஒபாமாவும் சந்தித்தனர். அப்போதுதான் அவரைப் பார்த்து ஒபாமா காதல் கொண்டுள்ளார். "நாங்கள் முதன்முதலாக வெளியே சென்று வந்தோம். அந்த சந்திப்பு முடிவதற்கு முன்பாகவே நாங்கள் திருமணம் குறித்து முடிவெடுத்துவிட்டோம்" என மிச்செல் நினைவுகூர்ந்துள்ளார். 1992-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திரைப்படத்தை ரிச்சர் டேன் இயக்கவுள்ளார். சிகாகோவில் ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்