பிரிட்டிஷ் நடிகர் டேனியல் க்ரெய்க், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார். இது அவரது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படமாக இருக்கலாம் என ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் டேனியல் க்ரெய்க். இதுவரை 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். ஆனால் மீண்டும் ஒருமுறை அந்த பாத்திரத்தில் நடிப்பதற்கு பதில் என் மணிக்கட்டை அறுத்துக் கொள்வேன் என சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசியிருந்தார்.
ஆனால் தற்போது, கடைசியாக ஒரு முறை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் டேனியல் க்ரெய்க் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவலை, அமெரிக்க டிவி நிகழ்ச்சி ஒன்றில் க்ரெய்க் அறிவித்தார்.
"இதைப் பற்றி நான் அதிகம் வெளியில் பேசவில்லை. நிறைய பேட்டிகள் தருகிறேன். இதைப் பற்றியே பலரும் கேட்கின்றனர். ஆனால் நான் கண்ணியமாக பதிலளிக்க மறுத்துள்ளேன். ஆனால் இப்போது உண்மையைப் பேச வேண்டும் என நினைக்கிறேன். அதை உங்களிடம் சொல்கிறேன்." என அந்நிகழ்ச்சியில் க்ரெய்க் கூற, அதற்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளர், "எங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லுங்கள். டேனியல் க்ரெய், நீங்கள் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு க்ரெய் ஆமாம் என பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், "ஆனால் இதுதான் கடைசி என நினைக்கிறேன். நான் ஒரு வெற்றியோடு வெளியேற வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago