கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்: டெட் மேன் டெல் நோ டேல்ஸ்' படம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'பே வாட்ச்' திரைப்படம் 3ஆம் இடத்தையே பிடித்தது.
'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' பட வரிசையில் 5-வது படமான 'டெட் மேன் டெல் நோ டேல்ஸ்' அமெரிக்க உட்பட உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியானது. சில நாடுகளில் ஸல்ஸார்’ஸ் ரிவெஞ்ச் என்ற பெயரில் வெளியானது. இந்தப் படம், அமெரிக்காவில் 3 நாட்களில் 62 மில்லியன் டாலர்கள் வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது. ஆனால் இது துறை வல்லுநர்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்த வசூலே ஆகும்.
மற்ற நாடுகளில் பைரட்ஸ் திரைப்படம் மொத்தம் 208.4 மில்லியன் டாலர்களை வசூலித்தது. முக்கியமாக ரஷ்ய நாட்டில் 18.6 மில்லியன் டாலர்கள் வசூலுடன் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்தப் படம் 3 மில்லியன் டாலர்களை (19 கோடி ரூபாய்) வசூலித்துள்ளது.
ட்வைன் ராக் ஜான்சன், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்து வெளியான 'பே வாட்ச்' படம் பைரட்ஸ் படத்துக்கு ஈடாக போட்டியிட முடியாதென்றாலும், 2ஆம் இடத்தையாவது பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கவர்ச்சிக்கு புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரின் திரை வடிவமாக இந்தப் படம் உருவாகியிருந்தது. ஆனால் வெறும் 18.1 மில்லியன் டாலர்களுடன் 'பே வாட்ச்' 3வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
4 வாரங்களுக்கு முன் வெளியான 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' படத்தின் இரண்டாம் பாகம் 19.8 மில்லியன் டாலர்களுடன் 2ஆம் இடத்தை பிடித்து அதிர்ச்சியளித்தது. வரும் வாரம் 'பே வாட்ச்' மேற்கொண்டு 31 நாடுகளில் வெளியாகவிருப்பதால், அந்த வசூல் இந்த ஏமாற்றத்துக்கு ஈடுகட்டிவிடும் என தயாரிப்பு தரப்பு எதிர்பார்க்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago