ஃபேட் ஆஃப் தி ஃபியூரியஸ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 532.5 மில்லியன் டாலர்களை உலகளவில் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் 8ஆம் பாகமான ஃபேட் ஆஃப் தி ஃபியூரியஸ், உலகளவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் 12-ஆம் தேதி மாலை முதலே படத்தின் திரையிடல் ஆரம்பமானது.
வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களில், அமெரிக்க தவிர மற்ற நாடுகளில், படத்தின் வசூல் 432.3 மில்லியன் டாலர்கள். இதற்கு முன் ஜூராஸிக் வேர்ல்ட் திரைப்படம் வசூலித்த 316.7 மில்லியன் டாலர்களே சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் 100.2 மில்லியன் டாலர்கள் வசூலோடு சேர்த்து இப்படம் 532.5 மில்லியன் டாலர்களை வசூலித்து அதிலும் சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்திய மொத்த வசூல் சாதனையை ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் படம் 529 மில்லியன் டாலர்களுடன் பெற்றிருந்தது.
மேலும், சீனாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் (3 நாள் வசூல்) என்ற சாதனையையும் ஃபேட் ஆஃப் தி ஃபியூரியஸ் படைத்தது. மெக்ஸிகோ, பிரிட்டைன், ரஷ்யா, ஜெர்மனி என பல நாடுகளில் இப்படம் வசூலில் முன்னணியில் உள்ளது.
2019ஆம் ஆண்டு, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9-ஆம் பாகமும், 2021ஆம் ஆண்டு 10-ஆம் பாகமும் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago