ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் 8-ஆம் பாகம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது.
நம்பமுடியாத கார் சாகச காட்சிகளுக்காகவே புகழ்பெற்றது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்கள். 2015 ஆண்டு வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஏழாம் பாகம், உலகளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது! தற்போது இதன் 8ஆம் பாகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதியன்று இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
சார்லீஸ் தெரோன் - வின் டீஸல்
காரி ஸ்காட் தாம்சன் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில், க்ரிஸ் மார்கன் இந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களால் புகழ்பெற்ற, நடிகர் பால் வாக்கர் இல்லாமல் வெளியாகும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சைஃபர் (சார்லீஸ் தெரோன்) வருகையால் ஏன் டாமினிக் (வின் டீஸல்) தனது குடும்பத்தையே பகைத்துக் கொள்ளும் சூழல் வருகிறது, அதிலிருந்து அவன் எப்படி மீண்டான் என்பதே 8-ஆம் பாகத்தின் கதை. மேலும் இந்த படத்தில் 'ராக்' ட்வைன் ஜான்சன், ஜேஸன் ஸ்டேதம், கர்ட் ரஸல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago