அமெரிக்க வெளியீட்டுக்கு முன்னரே இந்தியாவில் வெளியாகும் டிஸ்பிகபிள் மீ 3

By ஆலன் ஸ்மித்தீ

குழந்தைகளுக்கு ஈடாக பெரியவர்களையும் கவர்ந்த 'டிஸ்பிகபிள் மீ' படத்தின் 3-ஆம் பாகம் ஜூன் 16-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது. அமெரிக்க வெளியீட்டுக்கு 2 வாரம் முன்னதாகவே இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் உள்ள ‘மேக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட படம்தான், ‘டிஸ்பிகபிள் மீ’. பிறகு இந்த ஸ்டூடியோவை இல்லுமினேஷன் நிறுவனம் வாங்கியது.

69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘டிஸ்பிகபிள் மீ 1’, 543.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் குவித்தது. பிரதான பாத்திரங்களை விட, படத்தில் வரும் மினியன்ஸ் என்ற துடுக்குத்தனமான துணை பாத்திரங்கள் தான் அதிக புகழ்பெற்றது.

’டிஸ்பிகபிள் மீ’ படத்தின் 2-ஆம் பாகம் 2013ல் வெளிவந்து 970.8 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்தது. அவ்விரு படங்களையும் பியரீ காஃபின் மற்றும் க்ரிஸ் ரெனாட் ஆகிய இருவரும் இயக்கியிருந்தனர். தற்போது இதன் மூன்றாவது பாகம் 3டி-ல் வெளியாகவுள்ளது.

கதை சாரம்சம்

க்ரூ (ஸ்டீவ் காரெலின் குரல்) மற்றும் அவரது மனைவி லூசிக்கு (கிறிஸ்டின் விக்), புதிதாகப் புகழடைந்து வரும் பல்தாசர் பிராட் (ட்ரே பார்க்கர்) என்ற நவீனத் திருடனால் சிக்கல் வருகிறது. இடையே ட்ரூ (ஸ்டீவ் காரெல்) என்கிற உருவ ஒற்றுமை கொண்ட தனது இரட்டை சகோதரனை க்ரூ சந்திக்க நேரிட, சகோதரர்கள் ரீதியிலான பாசம், சிறிய சண்டையில் முடிகிறது. ஒரு கட்டத்தில் பிராட்டிற்கு ஒரு பாடம் கற்பிக்க சகோதரர்கள் இருவரும் இணையும்போது என்ன ஆனது என்பதே மீதிக் கதை.

முதல் இரு படங்களுக்குத் திரைக்கதை அமைத்திருந்த சின்கோ பால் மற்றும் கென் பொரியோ, இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். ஹெய்டர் பெரீரியா படத்திற்கு இசையமைத்துள்ளார். 90 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படத்தை இங்கு ஹன்சா பிக்சர்ஸ் வெளியீடு.

இடையே, 2015இல், ‘டிஸ்பிகபிள் மீ’ படத்தொடர்களின் ப்ரீக்வலாக 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட படம், ‘மினியன்ஸ்’. பியரீ காஃபினோடு இம்முறை கெயில் பால்டா, அப்படத்தை இயக்கியிருந்தார். 1.159 பில்லியன் அமெரிக்க டாலர்களை அப்படம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்