'ஸ்மர்ஃப்ஸ்' திரைப்படத்தின் மூன்றாம் பாகம் ஏப்ரல் 21-ஆம் இந்தியாவில் தேதி வெளியாகவுள்ளது.
சிறிய நீல நிற உருவம் கொண்ட ஸ்மர்ஃப்ஸ் குழந்தைகளிடையே பிரபலமான ஒரு கதாபாத்திரம். பெல்ஜிய கலைஞர் பேயோ என்பவர் உருவாக்கிய ஸ்மர்ஃப்ஸ் காமிக் புத்தக தொடரை தழுவி எடுக்கப்பட்டதே ஸ்மர்ஃப்ஸ் திரைப்படம்.
இதன் முதல் பாகம் 2011-ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2013-ஆம் ஆண்டும் வெளியானது. இந்த இரண்டு பாகங்களும் லைவ் ஆக்ஷன் - அனிமேஷன் படங்களாக வெளியானது. அதாவது அசல் நடிகர்களுடன் அனிமேஷன் கதாபாத்திரங்களும் தோன்றும்.
தற்போது வெளியாகவுள்ள மூன்றாம் பாகம் இதற்கு முந்தைய பாகங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், ஒரு மறு தொடக்கமாக உருவாகியுள்ளது. மேலும் முழுநீள அனிமேஷன் படமாகவும் தயாராகியுள்ளது.
தொலைந்து போன மர்மமான கிராமம் ஒன்றை கண்டுபிடிக்க ஸ்மர்ஃப்ஸ் கூட்டம் முயற்சிப்பத்தே 'ஸ்மர்ஃப்ஸ் - தி லாஸ்ட் வில்லேஜ்' படத்தின் கதை. ஜுலியா ராபர்ட்ஸ், மிஷல் ரோட்ரீகஸ், ஜேக் ஜான்சன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பின்னணி பேசியுள்ளனர்.
'ஷ்ரெக் 2' திரைப்படத்தை இயக்கியிருந்த கெல்லி ஆஸ்பரி இந்த பாகத்தை இயக்கியுள்ளார். ஏறக்குறைய 60 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் சோனி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஏற்கன்வே வெளியாகிவிட்ட ஸ்மர்ஃப்ஸ், இதுவரை 95 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago