ஹாலிவுட் பாக்ஸ்ஆபிஸ்: முதலிடத்தில் கார்ஸ் 3, தொடர் வசூல் மழையில் வொண்டர் வுமன்

By ஆலன் ஸ்மித்தீ

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் டிஸ்னி பிக்ஸார் நிறுவனத்தின் 'கார்ஸ் 3' திரைப்படம் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது வாரமாக தொடர் வசூல் மழையில் இருக்கும் 'வொண்டர் வுமன்' திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்தது.

2011-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பிக்ஸாரின் முதல் தோல்விப் படமாக ஆனது 'கார்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம். 6 வருடங்கள் கழித்து இதன் படத்தின் மூன்றாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் பாகத்தை போல ஏகோபித்த பாராட்டுகளை பெறாவிட்டாலும், இரண்டாம் பாகம் போல கடும் விமர்சனங்களை படம் சந்திக்கவில்லை

மூன்று நாட்கள் முடிவில் 'கார்ஸ் 3' 53.5 மில்லியன் டாலர்க் வசூலுடன் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்தது. இது துறை வல்லுநர்களின் எதிர்பார்ப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2-வது இடத்தில் 'வொண்டர் வுமன்' கோலோச்சியது. தொடர்ந்து 3-வது வாரமாக இரண்டாம் இடத்தில் இருக்கும் வொண்டர் வுமன் 40.7 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது. இப்போது அமெரிக்காவில் இதன் மொத்த வசூல் 274 மில்லியன் டாலர்களாகும். உலகளவில் 571 மில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது.

மோசமான விமர்சனங்களை சந்தித்த டாம் க்ரூஸின் 'தி மம்மி' திரைப்படம் 13 மில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்தில் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்