ரூ.2000 கோடி வசூலைக் கடந்த தீபிகா படுகோனேவின் ஹாலிவுட் படம்

By ஆலன் ஸ்மித்தீ

தீபிகா படுகோனே நடித்த முதல் ஹாலிவுட் திரைப்படமான ட்ர்பிள் எக்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் க்ஸாண்டர் கேஜ் திரைப்படம், 2017-ம் வருடம் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

வின் டீஸல் நடிப்பில் உருவான படம் ட்ர்பிள் எக்ஸ். இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2005-ம் வருடம் வெளியானது. 12 வருடங்கள் கழித்து இதன் மூன்றாம் பாகம் ஜனவரி மாதம் வெளியானது. பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, இத்திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.

ஜனவரி 20-ம் தேதி வெளியான ட்ர்பிள் எக்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் க்ஸாண்டர் கேஜ் திரைப்படம் இதுவரை 310 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 2075 கோடி ரூபாயாகும்.

ட்ரிபிள் எக்ஸ் சீனாவில் பல சாதனைகளை முறியடித்துள்ளது. அங்கு வெளியான இரண்டு வாரங்களில் 137 மில்லியன் டாலர்களை வசூலித்தது. ஆனால் தென் அமெரிக்காவில் இத்திரைப்படம் சுமாரான வசூலையே பெற்றது. அங்கு இதுவரை மொத்தம் 44 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது. இது படத்தின் 85 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் 14 சதவிதம் மட்டுமே.

மேலும் இந்தப் படம் இந்தியாவில் ரூ.54 கோடியை வசூலித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்