74-வது கோல்டன் குளோப் விருதுகள்: 7 விருதுகளுடன் லா லா லேண்ட் சாதனை

By ஆலன் ஸ்மித்தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் நடைபெற்ற 74-வது கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழாவில், லா லா லேண்ட் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் விருதை வென்று சாதனைப் படைத்தது.

ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும், கலைஞர்களையும் வருடா வருடம் கவுரவித்து வருகிறது. இதுவே கோல்டன் குளோப் என்றழைக்கப்படுகிறது. ஆஸ்கருக்கு இணையாக போற்றப்படும் இந்த விருதுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து முடிந்தது.

இந்த விழாவில் லா லா லேண்ட் 7 விருதுகளை வென்றது. அதிகபட்ச விருதுகளை வென்ற திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. அந்தப் படத்தின் இயக்குநர், நடிகர், நடிகை என அனைவரும் விருதுகளை வென்றனர்.


சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் விருதுகளை வென்ற ரயான் காஸ்லிங், எம்மா ஸ்டோன், மற்றும் டேனியல்



திரைப்பட விருதுகளின் முழு பட்டியல்:

சிறந்த திரைப்படம், டிராமா பிரிவு - மூன்லைட்

சிறந்த திரைப்படம் , மியூஸிக்கல் அல்லது காமெடி பிரிவு - லா லா லேண்ட்

சிறந்த நடிகர், டிராமா - கேஸி ஆஃப்லெக் (மான்செஸ்டர் பை தி ஸீ)

சிறந்த நடிகர், மியூஸிக்கல் அல்லது காமெடி பிரிவு - ரயன் காஸ்லிங் (லா லா லேண்ட்)

சிறந்த நடிகை, டிராமா - இஸபெல் ஹுப்பெர்ட் (எல்)

சிறந்த நடிகை, மியூஸிக்கல் அல்லது காமெடி பிரிவு - எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)

சிறந்த இயக்குநர் - டேமியன் சாஸெல் (லா லா லேண்ட்)

சிறந்த உறுதுணை நடிகர் - ஆரோன் டெய்லர் ஜான்சன் (நாக்டர்னல் அனிமல்ஸ்)

சிறந்த உறுதுணை நடிகை - வயோலா டேவிஸ் (ஃபென்சஸ்)

சிறந்த அயல் மொழித் திரைப்படம் - எல்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸூடோபியா

சிறந்த திரைக்கதை - டேமியன் சாஸெல் (லா லா லேண்ட்)

சிறந்த இசை - ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த பாடல் - சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (லா லா லேண்ட்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்