அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸையும் விட்டு வைக்காத பாகுபலி 2: டாம் ஹாங்க்ஸ் படத்தை முந்தி வசூல் சாதனை

By ஆலன் ஸ்மித்தீ

பல வசூல் சாதனைகளைப் படைத்து வரும் 'பாகுபலி 2', அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான டாம் ஹாங்க்ஸ், எம்மா வாட்சன் நடித்திருக்கும் 'தி சர்க்கிள்' படத்தை விட பாகுபலி 2 அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம், இந்தியாவில், திரையிட்ட அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிலும் கடந்த வாரம் வெளியான 'பாகுபலி 2', மற்ற ஆங்கிலப் படங்களுடன் போட்டியிட்டு, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

முக்கியமாக பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் டாம் ஹாங்ஸ், எம்மா வாட்ஸன் ஆகியோர் நடித்து வெளிவந்த 'தி சர்க்கிள்' படத்தை விட, பாகுபலி 2 அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. வெறும் 425 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியிருக்கும் 'பாகுபலி 2' வெளியான முதல் மூன்று நாட்களில் 10 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதாவது ஒரு திரையங்கத்தில் சராசரியாக 23 ஆயிரம் மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வசூல். அதே நேரத்தில், 3,163 திரையரங்குகளில் வெளியான தி சர்க்கிள் திரைப்படம், வெறும் 9.3 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்தது என்று அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் பாக்ஸ் ஆபிஸ் மோஜோ என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்கள் வசூலையும் தாண்டி, திங்கள், செவ்வாய் என 'பாகுபலி 2' தொடர்ந்து ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்த்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை வெளியான இந்திய சினிமாக்களின் வசூல் சாதனைகளையெல்லாம் 'பாகுபலி 2' முந்தி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அமெரிக்காவில் அதிக வசூல் பெற்ற இந்தியப் படமாக 'டங்கல்' இருந்தது. அதன் மொத்த ஓட்டத்தின் வசூல் 12.4 மில்லியன் டாலர்கள். தற்போது, பாகுபலி 2, வெளியான 6 நாட்களிலேயே 12.6 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்