ஹாலிவுட் திகில் படங்கள் இந்தியத் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுவரும் நிலையில் தற்போது ரசிகர்களை பயமுறுத்த 'லைட்ஸ் அவுட்' (Lights Out) என்கிற திகில் படம் வெளியாகவுள்ளது.
தமிழில் குறும்படங்கள் திரைப்படங்களாக உருவாவதைப் போல, டேவிட் சான்பெர்க் என்பவர் எடுத்த 'லைட்ஸ் அவுட்' (Lights Out) என்கிற குறும்படம்தான் தற்போது வார்னர் பிராஸ் தயாரிப்பில் திரைப்படமாக வெளியாகவுள்ளது.
இருளைக் கண்டால் பயப்படும் பெண், அவளது சகோதரன், மனநிலை பாதிக்கப்பட்டுள்ள அவளது அம்மா மூவருக்கும் நிகழும் அமானுஷ்ய அனுபவங்களே இந்தக் கதை. புதிதாக எந்த மாதிரியான பேய் படத்தை எடுக்கலாம் என தமிழ் இயக்குநர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருளில் மட்டுமே தெரியக்கூடிய பேய் என்ற புது களத்தோடு 'லைட்ஸ் அவுட்' திரைக்கு வருகிறது.
'கான்ஜுரிங்' படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியாவில் சூப்பர் ஹிட் ஆனது. 'கான்ஜுரிங்' இயக்குநர் ஜேம்ஸ் வான் 'லைட்ஸ் அவுட்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'கான்ஜுரிங்' போல 'லைட்ஸ் அவுட்' திரைப்படமும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையோடு ஜூலை 29-ஆம் தேதி இத்திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலத்தோடு இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
வெறும் ஐந்து மில்லியன் அமெரிக்க செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் நீளம் 81 நிமிடங்கள் மட்டுமே.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago