எங்கு சென்றாய் ஃபேன் - எக்ஸ் மேன், அயர்ன் மேன் ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல சீன நடிகை மாயம்

By செய்திப்பிரிவு

சீனாவின் பிரபல நாயகியும், அதிகம் வருமானம் பெறும் நடிகையாகவும் வலம் வந்த ஃபேன் பிங்பிங் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மாயமாகி இருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்துக்கு உள்ளாகி உள்ளது.

எக்ஸ் மேன், அயர்ன் மேன் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களிலும்  நடித்திருக்கும் ஃபேன் பிங்பிங்   கடந்த ஜூலை மாதம் மாயமாகி இருக்கிறார். அவர் எங்கு சென்றார்? எங்கு உள்ளார்? என்பது தெரியாமல் சீன ஊடகங்களில் தினமும் செய்தியாக மாறி இருக்கிறார்.

 கடந்த ஜூன் மாதம்  ஹாங்காங்கில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி பிங்பிங் சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்துதான் அவர் மாயமாகி இருக்கிறார்.

வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு சுமந்தப்பட்டதால் அவர் ரகசியமாக கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அல்லது பொழுது போக்கு உலகில் அதிகம் வருமானம் பெற்று வரும் ஃபேன் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பிங்பிங்கின் காதலரான அவருடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கியதால் பிங்பிங் ரசிகர்களை மேலும் குழப்பமடைய செய்துள்ளது.

ஃபேன் பிங்பிங்கின் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நீ எங்கு இருக்கிறார் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தொடர் பதிவுகளை பதிவிட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் சீன அரசிடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பதிலும் இதுவரை வராததால் பிங்பிங் விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்