புதிய பேட்மேனாக ‘ராபர்ட் பேட்டின்சன்’: அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பேட்மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ‘பேட்மேன்’. உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட இந்தக் கதாபாத்திரம், திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் இடம்பெற்று பெரும் வரவேற்பை பெற்றது. 1940 முதல் திரையில் வலம்வரத் தொடங்கிய பேட்மேன் கதாபாத்திரம், 2005-ம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'Batman Begins' படத்தின் மூலம் புத்துயிர் பெற்றது.

அதன்பிறகு, 2008-ல் வெளியான 'The Dark Knight' படம், பேட்மேன் கதாபாத்திரத்தை புகழின் உச்சத்துக்கு எடுத்துச் சென்றது. இந்தப் படத்தில் வில்லனான நடித்த ஜோக்கர் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2012-ம் ஆண்டு 'The Dark Knight Rises' படம் வெளியானது. இந்த 3 படங்களிலும் பேட்மேனாக க்ரிஸ்டியன் பேல் நடித்தார்.

பின்னர், பேட்மேன் படங்களை இயக்கும் பொறுப்பை ஜாக் ஸ்னைடரிடம் டிசி நிறுவனம் ஒப்படைத்தது. அவர் இயக்கிய ‘Batman v Superman: Dawn of Justice’, ‘Justice League’ ஆகிய படங்களில் பென் அஃப்லெக் பேட்மேனாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், பேட்மேன் படங்களை இயக்கும் பொறுப்பை டிசி காமிக்ஸ் நிறுவனம் தற்போது ‘Planet of Apes' படங்களை இயக்கிய மேட் ரீவ்ஸிடம் ஒப்படைத்துள்ளது.

அந்த வகையில், 2021-ம் ஆண்டு வெளியாகவுள்ள புதிய பேட்மேன் படத்தில், 'Twilight’ படங்களில் நாயகனாக நடித்த ராபர்ட் பேட்டின்சனை, பேட்மேனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சில தினங்களுக்க முன் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பேட்மேன் படங்களைத் தொடர்ந்து தயாரித்துவரும் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம், அடுத்த பேட்மேன் படத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படம், 2021-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்