பிரபல இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் பிராட் பிட் மற்றும் டிகாப்ரியோ இணைந்து நடிக்கவுள்ளனர்.
ஹாலிவுட்டில் தனக்கென தனி பாணியை உருவாக்கியிருக்கும் இயக்குநர் டாரண்டினோ. இவரது படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலை என்னவாக இருந்தாலும் இவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். டாரண்டினோ படம் இயக்குகிறார் என்று அறிவிப்பு வந்தாலே உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் குதூகலமாகிவிடுவார்கள்.
அப்படி ஒரு அறிவிப்பு தற்போது வந்துள்ளது. கூடுதலாக, அந்தப் படத்தில் பிராட் பிட் மற்றும் டிகாப்ரியோ என ஹாலிவுட்டின் இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற அறிவிப்பும் சேர்ந்து பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' (Once upon a time in Hollywood) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 1969ஆம் ஆண்டு, ஹாலிவுட்டில் இருந்த ஹிப்பி கலாச்சாரம் உச்சத்தில் இருந்தபோது நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
முன்னாள் தொலைக்காட்சி தொடர் நட்சத்திரம் ரிக் டால்டன் வேடத்தில் டிகாப்ரியோவும், அவரது சண்டைக் காட்சிகளில் டூப் போட்ட க்ளிஃப் பூத் வேடத்தில் பிராட் பிட்டும் நடிக்கிறார்கள்.
"நான் இந்த திரைக்கதையை ஐந்து வருடமாக எழுதி வருகிறேன். 1969ல் எனக்கு 7 வயது. அப்போதிலிருந்தே எனது பெரும்பாலான காலத்தை நான் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தான் கழித்திருக்கிறேன். அந்த கால லாஸ் ஏஞ்சல்ஸ் பற்றி, (இப்போது காணக்கிடைக்காத) அன்றிருந்த ஹாலிவுட் பற்றி கதையைக் கூற ஆர்வமாக இருக்கிறேன்.
மேலும் டிகாப்ரியோ மற்றும் பிட் போன்ற திறமைசாலிகளுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சி. கதைப்படி இருவரும் அவர்களுக்குப் புரியாத ஹாலிவுட்டில் பெரிதாக சாதிக்க தத்தளித்து வருகிறார்கள். ஆனால் ரிக்கின் பக்கத்து வீடு பிரபலமான ஒருவருடையது. அவர்தான் ஷேரன் டேட்" என்று டாரண்டினோ கூறியுள்ளார்.
நடிகை ஷேரன் டேட் பிரபல இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கியின் மனைவி. அவர் மான்சன் குடும்பத்தினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டபோது ஷேரன் கர்ப்பமாக இருந்தார். அவரோடு சேர்த்து இன்னும் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளை மையமாக வைத்து டாரண்டினோ இந்தப் படத்தை எழுதி இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக டாரண்டினோ இயக்கத்தில் இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தில் பிராட் பிட் நடித்துள்ளார். டிகாப்ரியோ ஜாங்கோ அன்செயிண்ட் படத்தில் நடித்துள்ளார்.
'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது ஹார்வீ வைன்ஸ்டீனின் வைன்ஸ்டீன் கம்பெனி அல்லாது டாரண்டினோ வெளியிடும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago