ஆஸ்கார் விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவி, சசிகபூருக்கு இசை அஞ்சலி

By ஐஏஎன்எஸ்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்த 2018ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில், மறைந்த பாலிவுட் நடிகர் சசிகபூர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் நினைவு கூறப்பட்டு, இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து் வருகிறது. திரை உலகில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக ஆஸ்கார் கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சசிகபூர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மறைவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த நடிகர் சசிகபூர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் பெயர்களை நடிகை ஜெனிபர் கார்னர் நினைவு கூர்ந்தார்.அவர் குறிப்பிடுகையில், பிரிதிவிராஜ் கபூரின் மகனும், ராஜ்கபூரின் இளைய சகோதரருமான பாலிவுட் நடிகர் சசி கபூர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மறைந்தார்.

பாலிவுட்டின் ஸ்மார்ட் ஆக்டர் என்று பெயர் எடுத்த சசி கபூர் மறைவு இந்திய சினிமாவுக்கு மட்டுமல்ல, சர்வதேச திரைஉலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். 2011ம் ஆண்டு இந்திய அரசால் பத்ம பூஷன் விருதும், 2015ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதும் பெற்றுள்ளார்.

அதேபோல பாலிவுட்டின் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக் கூடிய நடிகை ஸ்ரீதேவி கடந்த வாரம் காலமானார் என்று அவர் குறிப்பிட்டார்.

அப்போது, இசையமைப்பாளர் எட்டி வெட்டர் இசை அமைக்க, “ரூம் அட் தி டாப்” என்ற பாடலை டாம் பிட்டியின் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

இது தவிர, ஹாலிவுட் நடிகர்கள் ஜான் ஹியர்ட், டோனி அன்னே வாக்கர், ஜானே போரே, ராபர்ட் ஓஸ்பர்ன், மார்டின் லான்டுவு, கிளன் ஹெட்லி, ரோஜர் மூர், ஜார்ஜ் ஏ ரோமேரியோ, ஜெர்ரி லீவிஸ் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்