'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் 4-வது எபிசோடில் ஸ்டார் பக்ஸ் காபி கப் இடம்பெற்றது தொடர்பாக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குழுவினர் மன்னிப்பு கேட்டனர்.
1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய A Song of Ice and Fire என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டதே ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர். இத்தொடரின் முதல் எபிசோட் கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் இதுவரை 7 சீசன்களாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் 10 பகுதிகள்.
பரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையாலும் இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது.
வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர் தான் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.
இத்தொடரின் இறுதி அத்தியாயமான 8-வது சீசனின் 4-வது எபிசோட் கடந்த திங்கட்கிழமை (மே 6) அன்று இணையத்தில் வெளியானது. இதில் ஒரு காட்சியில் உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தின் காபி கப் ஒன்று மேஜை மீது இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களை மொய்க்கத் தொடங்கின.
பழங்காலத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட இந்த சீரிஸில் எப்படி ஸ்டார் பக்ஸின் காபி கப் வந்தது? இத்தனை வருடங்களாக எந்தக் குறையும் இல்லாமல் எடுக்கப்பட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு என்ன ஆனது’ என்ற ரீதியில் நெட்டிசன்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
காபி கப் இடம்பெற்றதன் காரணம் கவனக்குறைவா? அல்லது வேண்டுமென்றே வைக்கப்பட்டதா என்று ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த விவகாரத்துக்கு ஹெச்பிஓ நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களில் ஒருவரான பெர்னி கால்ஃபீல்ட் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''என்னால் இதை நம்ப முடியவில்லை. எப்போதும் எங்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் 1000 மடங்கு கவனத்துடன் இருப்பார்கள். அதையும் மீறி இது நடந்துள்ளது'' என்றார் பெர்னி கால்ஃபீல்ட்.
கேம் ஆஃப் த்ரோன்ஸின் இந்த கவனக்குறைவான விளம்பரத்தின் மூலம் ஒரு பைசா செலவில்லாமல் ஸ்டார் பக்ஸ் நிறுவனம் $2.3 பில்லியன் சம்பாதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago