ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பில் ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அர்னால்ட் நடித்து வெளியான படம் ’டெர்மினேட்டர்’. 1984 ஆம் ஆண்டு வெளியான இப்படம், உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு ‘டெர்மினேட்டர்’ படத்தின் இரண்டாம் பாகமான ’ஜட்ஜ்மென்ட் டே’ படம் வெளியானது. இதையும் ஜேம்ஸ் கேமரூனே இயக்கினார். முதல் பாகத்தைத் தாண்டி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இன்றுவரை வெளியான சிறந்த ஹாலிவுட் படங்களைப் பட்டியலிட்டால், அதில், ‘ஜட்ஜ்மென்ட் டே’ தவறாமல் இடம்பெறும். இதற்குப் பிறகு வெளியான ‘டெர்மினேட்டர் 3 - ரைஸ் ஆஃப் தி மெஷின்’, ‘டெர்மினேட்டர் சால்வேஷன்’, ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ ஆகிய படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ‘ஜட்ஜ்மென்ட் டே’ படத்துக்குப் பிறகு வெளியான டெர்மினேட்டர் படங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கவில்லை.
இந்நிலையில், நேற்று டெர்மினேட்டர் பட வரிசையில் ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்தப் படத்தை, முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தயாரித்துள்ளார். ‘டெட்பூல்’ படத்தை இயக்கிய டிம் மில்லர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago