'அவதார்' படத்தின் 2-ம் பாகம் 2021-ம் வருடத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், 2023, 2025, 2027 என இரண்டு வருட இடைவெளியில் அவதார் 5 வரை அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளன.
டிஸ்னி நிறுவனம் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை வாங்கிய பின், அதன் கட்டுப்பாட்டில் தற்போது தயாரிப்பில் இருக்கும் படங்களும் டிஸ்னியின் கைக்கு வந்துவிட்டன. இதில் முக்கியமாக ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' படங்களும் அடங்கும்.
2009-ல் வெளியான 'அவதார்' திரைப்படம், சினிமா வரலாற்றில் அதிகம் வசூல் செய்த படமாக மாறியது. (அந்த சாதனையை இன்னும் சில நாட்களில் 'எண்ட்கேம்' முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது).
தொடர்ந்து 'அவதார்' படத்தின் அடுத்த பாகங்கள் வரும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவ்வப்போது கூறிவந்தாலும், படப்பிடிப்பு மட்டும் தொடங்கியதாகத் தெரியவில்லை. இந்த பத்து வருடங்களையும் அவதார் உலகை இன்னும் விரிவாக்கி, அடுத்த பாகங்களின் கதையைச் செதுக்கவே கேமரூன் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பட்ஜெட்டில் 'அவதார்' படத்தின் அடுத்த பாகங்களுக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. முதல் பாகத்தை விநியோகித்த செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம், அடுத்த பாகங்களைத் தயாரிக்க கேமரூனுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டிருந்தது. தற்போது டிஸ்னி, ஃபாக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் டிஸ்னியின் வசம் உள்ளது.
ஏற்கெனவே 'ஸ்டார் வார்ஸ்' திரைப்பட உரிமைகள் டிஸ்னியிடமே உள்ளன. இனி இரண்டு வருடங்களுக்கு ஒரு 'அவதார் படம்' மற்றும் 'ஸ்டார் வார்ஸ் படம்' என டிஸ்னி திட்டமிட்டு அதற்கான வெளியீடு தேதி அட்டவணையையும் அறிவித்துள்ளது.
அதன்படி 2021, 23, 25, 27 வருடங்களில் 'அவதார்' படத்தின் 2,3,4 மற்றும் 5-ம் பாகங்கள் வெளியாகவுள்ளன. 'ஸ்டார்வார்ஸ்' படத்தின் அடுத்த பாகம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. 2022, 24, 26 வருடங்களில் அடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளன.
மேலும், அடுத்தடுத்த மார்வல் சூப்பர் ஹீரோ படங்கள், டிஸ்னியின் பழைய படங்களின் ரீமேக் உட்பட மற்ற அனிமேஷன் மற்றும் லைவ் ஆக்ஷன் படங்கள், பிக்சாரின் அனிமேஷன் படங்கள் என அடுத்த சில வருடங்களுக்கான முழு வெளியீடு அட்டவணையை டிஸ்னி வெளியிட்டு ஹாலிவுட்டை மிரள வைத்துள்ளது.
வர்த்தக காரணங்கள், அப்போதைய சந்தை மற்றும் அரசியல் நிலவரம், மக்களின் மனநிலை இவற்றைப் பொறுத்தெல்லாம் இந்த வெளியீட்டுத்தேதிகள் மாறலாம். ஆனாலும், இந்த விரிவான திட்டமிடல், அடுத்த சில வருடங்களில் டிஸ்னி எந்த அளவுக்கு ஹாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பதைக் காட்டுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago