ஹாலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படம், அமெரிக்கா, சீனா, இந்தியா என திரையிடப்பட்ட நாடுகளிலெல்லாம் பழைய வசூல் சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
தற்போது, 2 பில்லியன் டாலர்களை வெகுவிரைவில் எட்டிய படம் என்ற சாதனையைப் படைத்ததோடு, அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ‘டைட்டானிக்’கை முந்தி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன், இந்தச் சாதனையை ‘அவதார்’ படம் பெற்றிருந்தது. ஆனால், ‘அவதார்’ படம் இந்த வசூலை எட்ட 47 நாட்கள் ஆகின. ஆனால், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ வெறும் 11 நாட்களில் இதை சாதித்துள்ளது.
இந்நிலையில் 'அவெஞ்சர்ஸ்' படம், 'டைட்டானிக்' படத்தின் வசூல் சாதனையை முந்தியதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அப்படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (08.05.19) ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், ''கெவினுக்கும் மற்றும் அனைத்து மார்வெல் உறுப்பினர்களுக்கும், நிஜ டைட்டானிக் கப்பலை ஒரு பனிப்பாறை மூழ்கடித்தது. என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது. லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட் உறுப்பினர்கள் அனைவரும் உங்களின் மகத்தான சாதனைக்குத் தலைவணங்குகிறோம். திரைப்படத் துறை துடிப்போடு இருக்கிறது என்று மட்டும் நீங்கள் காட்டவில்லை. அது முன்பை விட பெரியதாக இருக்கிறது என்பதையும் நிரூபித்திருக்கிறீர்கள்'' என்று ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ள ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’, இங்கு 300 கோடியைத் தாண்டிய முதல் படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago