திரை விமர்சனம்: Avengers: Endgame

By செய்திப்பிரிவு

11 வருடங்கள், 21 படங்கள், 20-க்கும் மேற்பட்ட சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ இன்று (26.04.2019) வெளியாகிவிட்டது.

பேரண்டம் படைக்கப்பட்டபோது உருவான பவர் ஸ்டோன், ரியாலிட்டி ஸ்டோன், ஸ்பேஸ் ஸ்டோன், டைம் ஸ்டோன், சோல் ஸ்டோன், மைண்ட் ஸ்டோன் உள்ளிட்ட 6 கற்களைத் தேடி அலையும் தானோஸ் அவற்றைக் கைப்பற்றி உலகத்தில் உள்ள பாதி ஜீவராசிகளை அழிக்கிறான். இதில் பாதிக்கும் மேற்பட்ட அவெஞ்சர்கள் அழிந்து போகின்றனர். இது கடந்த ஆண்டு (2018) வெளியான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்தின் கதை.

தானோஸ் பாதி உலகை அழித்து 21 நாட்கள் கழித்து ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ கதை தொடங்குகிறது. மீதமுள்ள சூப்பர் ஹீரோக்கள் என்ன செய்வதென்று தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.

விண்வெளியில் தனியாக மாட்டிக்கொண்டிருக்கும் அயர்மேன் டோனி ஸ்டார்க்கை அவரது விண்கலத்தோடு மீண்டும் பூமிக்கு அழைத்து வருகிறார் கேப்டன் மார்வெல். அதன்பிறகு அதே விண்கலத்தில் தானோஸைக் கொன்று 6 கற்களையும் கைப்பற்ற கேப்டன் அமெரிக்கா, தோர், அயர்ன்மேன், கேப்டன் மார்வெல் உள்ளிட்டோர் புறப்படுகின்றனர். இவர்களோடு தானோஸின் வளர்ப்பு மகள் நெபுலாவும் இணைந்து கொள்கிறார். அங்கே உருக்குலைந்த நிலையில் இருக்கும் தானோஸைச் சந்திக்கும் அவர்களிடம் கற்கள் அழிந்து போய்விட்டதாக சொல்கிறான் தானோஸ். இதனைக் கேட்டு எரிச்சலடையும் தோர் தானோஸின் தலையைத் துண்டிக்கிறார்.

அதன் பிறகு 5 ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தங்கள் கையாலாகாத தனத்தை எண்ணி விரக்தியில் அவெஞ்சர்ஸ் ஆளுக்கொரு திசையில் சென்று விடுகின்றனர்.

இதற்கிடையில் 'Ant-man and the wasp' படத்தின் இறுதிக் காட்சியில் Quantum Realm எனப்படும் இடத்தில் மாட்டிக் கொள்ளும் ஆண்ட்மேன் ஸ்காட் மீண்டும் வருகிறார். அவெஞ்சர்களின் இடத்திற்கு உதவி கேட்டு வரும் ஸ்காட் காலப்பயணம் மூலம் மீண்டும் கற்களைக் கைப்பற்றி அழிந்து போனவர்களை மீட்டெடுக்கலாம் என்று கூறுகிறார். அவரது யோசனையின் படி காலப்பயணம் செய்யும் கருவியை உருவாக்குகிறார் அயர்ன்மேன்.

அதன் மூலம் 3 குழுவாகப் பிரிந்து கடந்த காலத்துக்கு சென்று கற்களை மீட்டு வருவதாகத் திட்டமிடுகிறார்கள். அதன்படி காலப்பயணமும் மேற்கொள்கிறார்கள். இது எப்படியோ கடந்த காலத்தில் இருக்கும் தானோஸுக்குத் தெரிந்து விடுகிறது. அதையும் தாண்டி அவெஞ்சர்ஸ் கற்களை மீட்டார்களா? அவெஞ்சர்களின் திட்டத்தை முறியடிக்க வில்லன் தானோஸ் என்ன செய்தான்? என்பதே ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தின் கதை.

’அயர்ன்மேன்’ படத்தின் மூலம் 2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் பயணம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த ஓராண்டாகவே பயங்கர எதிர்பார்ப்பில் இருந்த மார்வெல் ரசிகர்களுக்கு செம தீனி. அந்த எதிர்பார்ப்பிற்கு சாட்சியாக காட்சிக்கு காட்சி விசில் பறக்கிறது. அதிலும் தோரின் சுத்தியலை கேப்டன் அமெரிக்கா தூக்கும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது.

கேப்டன் அமெரிக்கா: 'கேப்டன் அமெரிக்கா: விண்டர் சோல்ஜர்', ' கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளனர். வழக்கமான அவெஞ்சர்ஸ் படங்களில் இருக்கும் ஆக்‌ஷன், காமெடி இந்தப் படத்திலும் உண்டு. ஆனால் அதையெல்லாம் தாண்டி இதுவரை இல்லாத அளவுக்கு எமோஷனல் காட்சிகள் படம் முழுவதும் உள்ளன. அதிலும் இறுதிக்காட்சியில் பலரும் கலங்கிய கண்களோடு வெளியேறுவதையும் காண முடிந்தது.

இதற்கு முந்தைய மார்வெல் படங்களை பார்க்காதவர்களுக்கு இந்தப் படத்தின் பல காட்சிகள் புரியாமல் போகலாம்.  இதுவரை வெளியான 21 மார்வெல் படங்களுக்கும் நியாயம் செய்யும் முடிவு இந்த ’எண்ட் கேம்’.

வழக்கமாக அனைத்து மார்வெல் படங்களிலும் இடம்பெறும் போஸ்ட் கிரெடிட் காட்சிகள் இந்தப் படத்தில் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்