'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொலைக்காட்சி தொடரின் இறுதி மற்றும் எட்டாவது சீசனின் முதல் பகுதியை ஒரே நேரத்தில் 17.4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
ஹோம் பாக்ஸ் ஆஃபிஸ் என்கிற ஹெச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. சர்வதேச அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இந்தத் தொடருக்கு, இதுவரை தொலைக்காட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதன் ஏழாவது சீசன் 2017-ஆம் ஆண்டு முடிந்தது. இறுதிப் பகுதிகளை எழுத தங்களுக்கு நேரம் தேவை என கதாசிரியர்கள் சொல்லிவிட, இதோ இதன் இறுதி மற்றும் எட்டாவது சீசனின் ஒளிபரப்பு 2019-ல் நடந்துள்ளது.
இந்த முதல் பகுதியை தொலைக்காட்சியிலும், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மூலமாகவும் ஒரே நேரத்தில் 17.4 மில்லியன் மக்கள் கண்டுகளித்துள்ளனர். இது ஒரு சாதனையாகும். இதற்கு முன், ஏழாவது சீசனின் கடைசிப் பகுதியை 16.9 மில்லியன் மக்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது.
இந்த 17.4 மில்லியன் கணக்கில், 11.8 மில்லியன் பார்வையாளர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது பார்த்துள்ளனர். இந்தப் பகுதியின் ஒளிபரப்பு முடிந்தவுடன், ட்விட்டரில் ட்ரெண்டான முக்கியத் தலைப்புகள் அனைத்துமே 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர்பானவை மட்டுமே.
இன்னும் இந்தத் தொடரில் மொத்தம் 5 பகுதிகளே மிச்சமுள்ளன. இந்த 5 பகுதிகளும் சராசரி 80 நிமிடங்கள் வரை ஓடும் என்று தெரிகிறது.
இந்தத் தொடர் முடிந்ததும், இதன் முன்கதையாக (prequel) ஒரு தொடர் தயாராகிறது. டிஸ்னி ஸ்டார் வார்ஸை வைத்து வியாபாரம் செய்வது போல, ஹெச் பி ஓ கேம் ஆஃப் த்ரோன்ஸை வைத்து இன்னும் பல விதங்களில் வியாபாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago