'ரஷ் ஹவர்' படத்தின் நான்காம் பாகம் எடுக்கப்படலாம் என நடிகர்கள் ஜாக்கி சானும், கிறிஸ் டக்கரும் சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.
ஜாக்கி சான் மற்றும் கிறிஸ் டக்கர் நடிப்பில் 1998-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ரஷ் ஹவர்'. இரண்டு போலீஸ் அதிகாரிகள் இணைந்து செய்யும் சாகசங்களே இந்தப் படம். முதல் பாகம் சர்வதேச அளவில் பெரும் வெற்றி பெற தொடர்ந்து 2001-ல் இரண்டாம் பாகமும், 2007-ல் மூன்றாம் பாகமும் வெளியானது. மூன்று பாகங்களுமே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றன.
குறிப்பாக இந்தியாவில் 'ரஷ் ஹவர் படத்தின்' மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இன்றளவும், இந்தப் படங்களின் டப்பிங் பதிப்புகளுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தற்போது நடிகர் கிறிஸ் டக்கர், ஜாக்கி சானின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு அவரைச் சந்தித்துள்ளார்.
அப்படியே, இருவரும் இணைந்து நிற்குமாறு ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதில் இருவருமே கையில் நான்கு விரல்களைக் காட்டி போஸ் கொடுக்கின்றனர். அந்தப் புகைப்படத்துக்கு கீழ் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், 12 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் 'ரஷ் ஹவர்' படத்தின் 4-ம் பாகத்தில் மீண்டும் இணைகிறார்கள். அதான் 4 விரல்களைக் காட்டி சூசகமாகச் சொல்கின்றனர் என ஹாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago