உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ (Game of Thrones - GOT) ஆங்கிலத் தொடரின் 8ஆவது சீசனின் முதல் எபிசோட் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது.
1991ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய A Song of Ice and Fire என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டதே ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர். இத்தொடரின் முதல் எபிசோட் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடர் இதுவரை 7 சீசன்களாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் 10 பகுதிகள்.
பரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையாலும் இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது.
வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர் தான் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.
இத்தொடரின் இறுதி அத்தியாயம் இன்று வெளியாகியுள்ள 8வது சீசன். அது எப்போது ஒளிபரப்பாகும் என கடந்த ஒரு வருடமாக ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ 8வது சீசனின் முதல் எபிசோட் இன்று வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு எபிசோட்களாக தினமும் வெளியிடப்படும்.
கடந்த 2 நாட்களாக ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஜூரத்தால் இணையம் முழுவதும் தொடர்ந்து அது குறித்த மீம்களும் பதிவுகளும் தீயாய் பறந்தன. இந்நிலையில் அறிவித்தபடி இன்று அதிகாலை 6.30 மணிக்கு முதல் எபிசோட் hotstar-ல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago