‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்துக்காக மார்வெல் நிறுவனம் கூகுளில் வித்தியாசமான ப்ரமோஷன் செய்துள்ளது.
2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிகிறது. கடந்த வருடம் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாம் பாகமான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' வெளியாகி, 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' நேற்று (ஏப்ரல் 26) வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடித்துள்ள இப்படத்தை ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கியுள்ளனர்.
அவெஞ்சர்ஸ் டீ-ஷர்ட்டுகள், பொம்மைகள், போஸ்டர்கள், படம் குறித்த நிகழ்வுகள் எனக் கடந்த சில மாதங்களாகவே இப்படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் மார்வெல் நிறுவனம் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ வெளியாகியுள்ள நிலையில், கூகுளில் வித்தியாசமான ப்ரமோஷனை மார்வெல் நிறுவனம் செய்துள்ளது.
அதாவது, அவெஞ்சர்களின் பிரதான எதிரி தானோஸ், தன் கையில் இருக்கும் 6 மந்திரக் கற்களின் மூலம் ஒரே சொடக்கில் உலகை அழித்துவிடுவார். இந்தக் காட்சி, ’அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ படத்தின் இறுதியில் அமைந்திருக்கும்.
இதன் அடிப்படையில், கூகுளில் 'Thanos' என டைப் செய்தால், தானோஸ் கையில் அணிந்திருக்கும் ‘இன்ஃபினைட் கான்ட்லெட்’ எனப்படும் கையுறை போன்று ஐகான் வருகிறது. திரையில் வலது பக்கத்தில் இருக்கும் அந்த ஐகானை அமுக்கினால், ‘இன்ஃபினிட்டி வார்’ படத்தின் சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் மறைவது போல் கூகுள் தேடல்கள் அனைத்தும் மாயமாய் மறைகின்றன. அதனைத் தொடர்ந்து கூகுள் தேடல்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைகிறது.
அவெஞ்சர்ஸ் ரசிகர்களை மனதில் வைத்து இந்த ப்ரமோஷனை மார்வெல் நிறுவனம் செய்துள்ளது. இது, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago