2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிந்துள்ளது. கடந்த வருடம் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாம் பாகமான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' வெளியாகி, 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' நேற்று (ஏப்ரல் 26) வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடித்துள்ள இப்படத்தை, ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கியுள்ளனர்.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 22-வது படமாக வெளியாகியுள்ள 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்', இன்னும் சில வாரங்களிலேயே இந்திய பாக்ஸ் ஆபீஸில் 300 - 400 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம், டிக்கெட் முன்பதிவிலேயே புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வர்த்தக நிபுணரான கோமல் நாட்டா கூறும்போது, “நல்ல படைப்புகளுக்கு எப்போதும் இந்தியாவில் வரவேற்பு உண்டு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இந்தப் படம் இந்திய பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த படங்களில் ஒன்றாக மாறப்போகிறது” என்றார்.
முதல் நாள் வசூல் ரூ. 50 கோடி
மேலும், “இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடி ரூபாயைக் கடந்துவிட்டது. இது ‘2.0’ (ரூ. 51 கோடி) மற்றும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ (ரூ. 52.25 கோடி) ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் கோமல் நாட்டா கூறினார்.
கார்னிவல் சினிமாஸ் நிர்வாக இயக்குநர் பிவி சுனில் கூறுகையில், “இந்திய சினிமா வரலாற்றில் ஒரு ஹாலிவுட் படம் இதற்கு முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிப்பது இதுவே முதன்முறை. சில நகரங்களில் அதிகாலை 3.30 மணிக்கு கூட திரையிடப்படுகிறது. சனி, ஞாயிறு தினங்களுக்கான டிக்கெட்கள் 80% முதல் நாளே விற்றுத் தீர்ந்து விட்டன. முதல் மூன்று நாட்களின் வசூல் ரூ. 160 கோடியைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.
புதிய சாதனை
பிவிஆர் சினிமாஸ் தலைமை நிர்வாக அதிகாரி கமல் கியான்சந்தானி கூறும்போது, “இந்த வார இறுதிக்கான அனைத்து டிக்கெட்களும் ஆன்லைனில் முன்பதிவாகிவிட்டது. எங்களின் 90% திரையரங்கங்களை ‘அவெஞ்சர்ஸ்’ ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது” என்று கூறியுள்ளார்.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளமான Bookmyshow தரப்பில் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படம் முதல்நாளில் 40 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
45 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago