‘அவெஞ்சர்ஸ்’ இறுதி பாகத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பாடல்

By செய்திப்பிரிவு

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்காக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரு பாடலை உருவாக்கவுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

மார்வல் சினிமாட்டிக் யுனிவர்சின் மூன்றாவது கட்டத்தில் கடைசிப் படமாக வெளியாகிறது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படம், ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது.

இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ்’ படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் ‘எண்ட்கேம்’ திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பாகத் தமிழ், தெலுங்கு, இந்தி என மாநில மொழிகளில் வெளியாகும் பதிப்புகளும் தனி கவனம் ஈர்க்கும் வகையில் விளம்பரம் செய்து வருகிறது டிஸ்னி-மார்வல் நிறுவனம்.

இதன் ஒரு பகுதியாக, சர்வதேச நட்சத்திரமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்காக தனியாக ஒரு பாடலை உருவாக்கவுள்ளார். இது மூன்று மொழிகளிலும் தயாராகிறது. ஏப்ரல் 1-ம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என்று தெரிகிறது.

படத்தில் இந்தப் பாடல் இடம்பெறாது என்றாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதால் கண்டிப்பாக இது டப்பிங் பதிப்புகளுக்கு கூடுதல் கவனத்தை ஈர்க்கும். முன்னதாக, ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ தமிழ் டப்பிங் வடிவத்துக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதுவதாக அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்