இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிராமி விருதுகள் 2019 விருது வழங்கும் விழாவுக்கு தனது மகள் ரஹீமாவை அழைத்து வந்திருந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஸ்டேப்பிள்ஸ் மையத்தில் கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிம்பல், ஃபாலுஸ் பஜார் மற்றும் பிலவ்டு ஆகிய இசை ஆல்பங்களுக்காக பல்வேறு பிரிவுகளில் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட லண்டனைச் சேர்ந்த பிரசாந்த் மிஸ்ட்ரி, நியூயார்க்கைச் சேர்ந்த பால்குனி ஷா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சாத்னம் கவுர் ஆகியோருடன் சேர்ந்து ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானும் வந்திருந்தார்.
இந்நிகழ்ச்சியின்போது ஏ.ஆர்.ரஹ்மான் கருப்பு மற்றும் கிரே நிறத்தில் சூட் அணிந்திருந்தார். ரஹீமா முழுவதும் கருப்பு உடைகளை அணிந்து வந்துள்ளதையும் காணமுடிந்தது.
இவ்விருதுக்காக பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இசை நட்சத்திரங்களான கேசி முஸ்கிரேவ்ஸ், சைல்டிஷ் காம்பினோ, கார்டி பி மற்றும் குவான்சி ஜோன்ஸ் ஆகியோரது படங்களையும் தனது இணைய பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார்.
விழா அரங்கில் டோலி பார்டோனுக்காக நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியான லேடி காகாவின் அபார நடிப்பிலான ''ஷாலோ'' வீடியோவையும் தனது வலைதளத்தில் பகிர்ந்துகொண்டார்.
2009ல் ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக இரு கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago