டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'ஆக்வாமேன்', சர்வதேச அளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலை எட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வெளியான 'ஆக்வாமேன்' திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
'சூப்பர்மேன்', 'ஜஸ்டிஸ் லீக்', 'சூஸைட் ஸ்க்வாட்' உள்ளிட்ட சூப்பர்ஹீரோ படங்களின் தோல்வியில் துவண்டிருந்த டிசி நிறுவனத்துக்கு 'வொண்டர் வுமன்' திரைப்படம் முதல் ப்ளாக் பஸ்டராக அமைந்தது. தற்போது 'ஆக்வாமேன்' அதையும் முந்தியுள்ளது.
இதற்கு முன், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'பேட்மேன் பிகின்ஸ்', 'டார்க் நைட்', 'டார்க் நைட் ரைசஸ்' ஆகிய படங்கள் தான் டிசி’யின் குறிப்பிடத்தக்க படங்களாக இருந்தன. குறிப்பாக 'டார்க் நைட் ரைசஸ்' திரைப்படம் சர்வதேச அளவில் 1.084 பில்லியன் டாலர்களை வசூலித்தது. டிசி சூப்பர் ஹீரோ படங்களில் அதிக வசூல் இதுவே.
தற்போது 1.02 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ள 'ஆக்வாமேன்', விரைவில் இந்த சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் 'ஆக்வாமேன்' வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் வானுக்கு இது இரண்டாவது ஒரு பில்லியன் படம். இதற்கு முன் இவர் இயக்கிய 'பியூரியஸ் 7' திரைப்படம் 1.5 பில்லியன் டாலர்களை வசூலித்திருந்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago