டிசம்பர் 3 திங்கட்கிழமை அன்று மாலை, மார்வல் ஸ்டூடியோஸின் 'கேப்டன் மார்வல்' படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.
அதை விட பெரிய செய்தியாக, டிசம்பர் 5 புதன்கிழமை காலை 'அவெஞ்சர்ஸ் 4' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று டிஸ்னி/ மார்வல் தரப்புக்கு நெருங்கிய தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஏபிசி சேனலில் ஒளிபரப்பாகும் குட்மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் அவெஞ்சர்ஸின் ட்ரெய்லர் வெளியாகும் என்று தெரிகிறது.
டிஸ்னி மார்வல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ கூட்டத்தில் புதிய சூப்பர் ஹீரோ கேப்டன் மார்வல். ப்ரை லார்சன் கேப்டன் மார்வலாக நடிக்கிறார். ஏற்கெனவே இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் செப்டம்பர் மாதம் வெளியாகிவிட்டது. தற்போது இரண்டாவது ட்ரெய்லர் டிசம்பர் 3 அன்று மாலை வெளியாகிறது. கேப்டன் மார்வலின் புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் கிட்டத்தட்ட இதே நேரத்தில் தான் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதனால் இந்த வருடமும் அதே நேரத்தில் 'அவெஞ்சர்ஸ் 4' படத்தின் ட்ரெய்லரும் வெளியாகும். அதோடு படத்தின் பெயர் என்னவென்றும் தெரியவரும் என மார்வல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
'கேப்டன் மார்வல்' மார்ச் 8, 2019 அன்று வெளியாகவுள்ளது. 'அவெஞ்சர்ஸ் 4' மே 3, 2019 அன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு படங்களும் 2 மாத இடைவெளியில் வெளியாகவுள்ளதால், இரண்டு படங்களின் விளம்பரங்களும் கூட அதே போல அடுத்தடுத்து மக்களிடையே சென்று சேர மார்வல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
'அவெஞ்சர்ஸ் 3' முடியும்போது, சூப்பர் வில்லன் தானோஸின் கை (விரல்) வண்ணத்தால் முக்கியமான சூப்பர் ஹீரோக்கள் மறைந்து, கையளவு சூப்பர் ஹீரோக்களே மீதமுள்ளனர். தானோஸை வீழ்த்துவதில் கேப்டன் மார்வல் கதாபத்திரம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே 'கேப்டன் மார்வல்' படத்தை விட, படத்தின் வரப்போகும் எண்ட் க்ரெடிட்ஸ் காட்சி என்னவென்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago