20 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு நடிகர் ராபர்ட் டிநீரோவும், அவரது மனைவி கிரேஸ் ஹைடவரும் பிரிய முடிவெடுத்துள்ளனர்.
டாக்ஸி டிரைவர், காட்ஃபாதர், குட்ஃபெல்லாஸ் என 70-களிலும் 80-களிலும் ஹாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வந்தவர் ராபர்ட் டிநீரோ. இன்றளவும் இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நன்மதிப்பு உள்ளது.
1987-ம் ஆண்டு, லண்டனில் மிஸ்டர் சௌ என்ற உணவகத்தில் பணியாற்றி வந்த கிரேஸைச் சந்தித்தார். இருவரும் அடுத்த 10 வருடங்கள் காதலர்களாக இருந்தனர். 1997-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு எல்லியட் (20) என்ற மகனும், ஹெலன் கிரேஸ் (6) என்ற மகளும் உள்ளனர்.
இப்போது இவர்கள் இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அடுத்த ஒரு வாரத்துக்குள் அதிகாரபூர்வமாக இதை அவர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தற்போது சேர்ந்து வாழவில்லை என்பதை ஹாலிவுட்டின் பத்திரிகை ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே டிநீரோ விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். ஆனால், அப்போது பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டது. தற்போது நீரோவுக்கு வயது 75, கிரேஸுக்கு 63.
நீரோவுக்கு ஏற்கெனவே டையான் அபோட் என்பவருடன் மணமாகி விவாகரத்தாகியுள்ளது. மேலும், டூகி ஸ்மித் என்பவருடனும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago