லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘ஓபன்ஹெய்மர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கும் புதிய படம் 2026-ல் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹெய்மர்’ அணு குண்டை கண்டுபிடித்தவரும், இயற்பியலாளருமான ‘ஒபன் ஹெய்மரின்’ வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவானது. இந்தப் படத்துக்கு 7 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நோலன் இயக்கும் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மேட் டிமன் நடிக்கிறார்.
இவர் முன்னதாக நோலன் இயக்கத்தில் 2014-ல் வெளியான ‘இன்டர்ஸ்டெல்லர்’ மற்றும் ‘ஓபன் ஹெய்மர்’ படங்களில் நடித்தவர். தற்போது மீண்டும் நோலனுடன் இணைகிறார். இந்தப் படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நோலன் மனைவி எம்மா தாமஸ் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல் வெளியாக உள்ளது. படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்ஸ் ஃபார்மெட்டில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கும் 13-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago